உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி

 ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி

புதுச்சேரி: ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. புதுச்சேரி சட்டசபை தேர்தல் கடந்த 9ம் தேதி நடந்தது. மொத்தம் 1,099 ஓட்டுச் சாவடிகளில் பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய நான்கு மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதன்படி புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 23 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்களுக்கு நேற்று இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லுாரி கருத்தரங்கு கூடத்தில் பயிற்சி முகாம் நடந்தது. முகாமியில் ஒருங்கிணைப்பாளர் முரளிதரன், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் முறை குறித்து செயல் விளக்கத்துடன் விளக்கினார். மேலும், ஓட்டு எண்ணிக்கையின் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார். தபால் ஓட்டுகள் எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்களுக்கு இன்று காலை பயிற்சி வகுப்பு நடக்கிறது. அதேபோன்று, அனைத்து தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு இன்று கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி