மேலும் செய்திகள்
மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கம்
16-Oct-2025
புதுச்சேரி: தவளக்குப்பம் ராஜீவ் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொழில் முனைவோர் மற்றும் வேலை வாய்ப்பு பிரிவு சார்பில் கல்லுாரியில் மாணவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நிகழ்ச்சி கல்லுாரி பல்நோக்கு கருத்தரங்க கூடத்தில் நடந்தது. வணிக கூட்டுறவு மேலாண்மை துறைத் தலைவர் செல்வராஜ் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ஹென்னா மோனிஷா தலைமை தாங்கினார். முனைவர் அருளரசி பயிற்சி குறித்து விளக்கினார். சிறப்பு அழைப்பார்களாக புதுச்சேரி பல்கலைக்கழக சமூக கல்லூரியின் மேலாண்மை துறைத் தலைவர் பாரதி, குழும பயிற்சியாளர் ஐஸ்வர்யா, இணை இயக்குநர் நாக் ஜோதி கிருஷ்ணா, பயிற்சியாளர் ஷாக்ஷி கோலி ஆகியோர் கலந்து கொண்டு இந்திய தொழில் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகள், அதனைப் பெறுவதற்கான வழிகள் குறித்து பேசினர். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் நாராயணன் செய்திருந்தார். உதவி பேராசிரியர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.
16-Oct-2025