உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  திருநங்கையர் கண்டன ஆர்ப்பாட்டம்

 திருநங்கையர் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: மத்திய அரசின் திருநங்கையர் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுச்சேரி அண்ணாசாலை சிலை அருகில் நேற்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவன திட்ட இயக்குநர் சீத்தல் தலைமை தாங்கினார். 50க்கும் மேற்பட்ட திருநங்கையர், அனைத்து சமூக இயக்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். பாலின அடையாளத்தை நாங்களே தீர்மானிக்கும் உரிமை சட்டத்தை பறிக்க கூடாது. அடையாள அட்டை பெற மருத்துவக் குழுவின் சான்றிதழ் கட்டாயம் என்பது தனிமனிதச் சுதந்திரத்திற்கு எதிரானது. கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. பவதாரிணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை