உள்ளூர் செய்திகள்

திருநங்கை தற்கொலை

அரியாங்குப்பம்: சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்ட திருநங்கை துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.முதலியார்பேட்டை, அறப்பணி அவ்வை தோட்டத்தை சேர்ந்தவர் அர்ச்சனா, 55; திருநங்கை. சிறுநீரக நோயால் அவதிப்பட்டு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி