உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்குவரத்து மாத நிறைவு விழா: கவர்னர், முதல்வர் பங்கேற்பு

போக்குவரத்து மாத நிறைவு விழா: கவர்னர், முதல்வர் பங்கேற்பு

புதுச்சேரி; புதுச்சேரியில் தேசிய போக்குவரத்து மாத நிறைவு விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், மாணவர் கள் உள்ளிட்டோருக்கு பரிசு கள் வழங்கி பாராட்டினார்.புதுச்சேரி, கம்பன் கலையரங்கில், போக்குவரத்து துறை சார்பில், 36 வது தேசிய போக்குவரத்து மாத நிறைவு விழா நேற்று நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.சாலை போக்குவரத்து விதிமுறைகளை முறையாக நடைமுறைப்படுத்திய போலீசார், விழிப்புணர்வு எற்படுத்திய நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரிகள் மற்றும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.மேலும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பாடத் திட்டம் குறித்த வீடியோக்களை பள்ளிக் கல்வித்துறையிடம் ஒப்படைத்தார். முன்னதாக, ஆட்டோமேடிக் பிரேக் சிஸ்டத்தை வடிவமைத்த ஆச்சார்யா பள்ளி மாணவர்களின் செயல் விளக்கத்தை, பார்வையிட்டு பாராட்டினார்.விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தலைமை செயலர் சரத் சவுகான், அரசு செயலர்கள் மாதவ் ராவ் மோரே, ஜவஹர், முத்தம்மா, போக்குவரத்துத் துறை ஆணையர் சிவக்குமார், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி மற்றும் பள்ளி மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி