மேலும் செய்திகள்
போதை பொருள் விற்ற 107 கடைகளுக்கு 'சீல்'
12-Aug-2025
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், காச நோயை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மத்திய சுகாதாரத்துறை மூலம், காச நோயை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரியாங்குப்பம், ஆரம்ப சுகாதார நிலையத்தில், காச நோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். டாக்டர் தாரணி வரவேற்றார். அரசு மற்றும் தனியார் நர்சிங் கல்லுாரிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். காச நோயை தடுப்பது குறித்தும், பழங்கள், காய்கறிகள், சத்தான உணவு வகைகளை காட்சிப்படுத்தி, சுகாதார நிலையத்திற்கு வந்தவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புதுச்சேரி காச நோய் ஒழிப்பு திட்ட இயக்குநர் வெங்கட்பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
12-Aug-2025