உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காசநோய் ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கல்

 காசநோய் ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கல்

புதுச்சேரி: லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி கவர்னர் கைலாஷ்நாதன் தலைமையில் நடந்தது. 'காசநோய் இல்லா பாரதம்' இலக்கை நோக்கி பிரதமரின் டிபி முக்த் பாரத் திட்டம் நாடு முழுதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்தில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடையும் விதமாக வழங்கப்படும் மாதாந்திர ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று, பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகள் வழங்கினார். சுகாதாரத் துறைச் செயலாளர் சவுத்ரி முகமது யாசின், சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள், திட்ட இயக்குனர் கோவிந்தராஜன், மாதாந்திர ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடு மாநில காசநோய் அதிகாரி வெங்கடேஷ், லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி பத்மினி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ