மேலும் செய்திகள்
ஆபாச பேச்சு 3 வாலிபர்கள் கைது
18-Jun-2026
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர். சேதாரப்பட்டு போலீசார் காலை 10:30 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது திண்டிவனம் கிடங்கல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 23, என்பவர் மதுபோதையில் சேதாரப்பட்டு சிறப்பு பொருளாதர மண்டலம் பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார். ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதேபோல் கரிக்கலாம்பாக்கம் பகுதியில் மது போதையில் ஆபாசமாக பேசிய சரத், 32, என்பவரை கரிக்கலாம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
18-Jun-2026