| ADDED : நவ 24, 2025 06:49 AM
காரைக்கால்: காரைக்கால், நிரவி சிவன் கோவில், தெற்கு வீதியை சேர்ந்தவர் விவேக், 47; எலக்ட்ரிக் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வெளியே வேலைக்கு சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது, வீட் டு வாசலில் வைத்திருந்த ஒயர் மற்றும் மோட்டாரை வாலிபர் கள் இருவர் பைக்கில் திரு டிச் சென்றது தெரிய வந்தது. விவேக் தனது நண்பர்கள் உதவியுடன் மோட்டார் திருடிச் சென்றவர்களை விரட்டி பிடித்து, நிரவி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், திருவேட்டக்குடி காலனியை சேர்ந்த ஹரிஹரன், 20, மற்றும் அதேப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் மோட்டார் மற்றும் ஒயரை திருடியது தெரிய வந்தது. போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர். சிறுவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். அவர்களி டம் இருந்து ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள மின் ஒயர் மற்றும் மோட்டாரை போலீசார் பறிமுதல் செய்தனர்.