உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது

 பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது

புதுச்சேரி: கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ரெட்டியார்பாளையம், போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்து பணியில் இருந்தனர். அப்போது, புதுநகர் 2வது தெருவில் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கிருந்து தப்பிக்க முயன்றவரை, போலீசார் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அதில், புதுநகர் இரண்டாவது தெருவை சேர்ந்த ஜான் மகன் ஸ்டீபன்ராஜ், 26; என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிந்து, கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல், சாரம் பகுதியை சேர்ந்த பழனி மகன் சுண்டு (எ) ஆனந்த், 24; என்பவரை உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து போலீசார் கத்தியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ