உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏ.டி.எம்.,ல் ரூ. 12 லட்சம் திருட்டு ஏனாமில் இரண்டு பேர் கைது

ஏ.டி.எம்.,ல் ரூ. 12 லட்சம் திருட்டு ஏனாமில் இரண்டு பேர் கைது

புதுச்சேரி : ஏனாமில் ஏ.டி.ம்., இயந்திரத்தில் ரூ.12 லட்சம் திருடி, நாடகமாடிய பணம் நிரப்பும் நிறுவன ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, ஏனாம் பஸ் நிலையம் எதிரே உள்ள கார் ெஷட்டில் கடந்த ஜூலை 7ம் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கார் ெஷட்டில் இருந்த 2 பைக், ஒரு கார் எரிந்து சேதம டைந்தது. மேலும், அருகில் இருந்த ஏ.டி.எம்., மையமும் தீப்பிடித்து எரிந்தது. அதில், தீ விபத்திற்கு 10 நாட்களுக்கு முன் அந்த ஏ.டி.எம்., இயந்திரத்தில் நிரப்பப்பட்ட 15 லட்சம் ரூபாய், இயந்திரம் பழுதானதால், அப்படியே இருந்து எரிந்து விட்டதாக பணம் நிரப்பும் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஏனாம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை பார்வையிட்டபோது, ஏ.டி.எம்., மையத்தில் இருந்து தான் முதலில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. விசாரணையில், தீ விபத்திற்கு பிறகு பணம் நிரப்பும் நிறுவன ஊழியர்களான வெங்கடேஷ், அனில்பாபு ஆகியோர் ஆடம்பர செலவு செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, ஏ.டி.எம்., மையத்தில் ஏற்பட்டது தீ விபத்து அல்ல. திட்டமிட்டு நடந்த சதி என்பதும், ஏ.டி.எம். இயந்திரம் பழுதடைந்து இருந்தபோது, அவர்கள் இருவரும் இணைந்து அதிலிருந்த ரூ. 12 லட்சத்தை திருடியதும் தெரியவந்தது. திருட்டை மறைக்க ஏ.டி.எம்., மையத்திற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததும், விபத்து நடந்து ஒரு மாதத்திற்கு பிறகு, தங்களை யாரும் கண்டுபிடிக்கவில்லை என, நினைத்து, திருடிய பணத்தில் கார், தங்க செயின் உள்ளிட்டவைகளை வாங்கி ஆடம்பர செலவு செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீசார், திருடிய பணத்தில் வாங்கிய காரை பறிமுதல் செய்தனர். பின், இருவரையும் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ