உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உமர் காலித், அப்சல் குரு உருவ பொம்மையை எரித்து பேராட்டம் 

உமர் காலித், அப்சல் குரு உருவ பொம்மையை எரித்து பேராட்டம் 

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் ஏ.பி.வி.பி.,  மாணவ அமைப்பினர் உமர் காலித், அப்சல் குரு உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இடதுசாரி மாணவர் அமைப்பினர் தேசிய இறையாண்மைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் உமர் காலித் தொடர்பான ஆவண படத்தை, வெளியிட்டதை கண்டித்து, ஏ.பி.வி.பி.,  மாணவ அமைப்பினர் நேற்று இரவு உமர் காலித் மற்றும் அப்சல் குரு உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உமர் காலித், தீவிரவாதி அப்சல் குரு மற்றும் இதனை ஊக்குவிக்கும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை கண்டித்து உருவ பொம்மை எரிக்கப்பட்டதாக போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் தெரவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை