உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஐ.நா., உலக நீர் தர ஆலோசனை குழு புதுச்சேரி சுற்றுச்சூழல் நிபுணர் தேர்வு

ஐ.நா., உலக நீர் தர ஆலோசனை குழு புதுச்சேரி சுற்றுச்சூழல் நிபுணர் தேர்வு

புதுச்சேரி: ஐ.நா.வின் உலக நீர் தரக் கூட்டணி ஆலோசனைக் குழுவில் புதுச்சேரி பல்கலைக்கழகம் முன்னாள் மாணவர் நந்திவர்மன் முத்து உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி சுற்றுச்சூழல் நிபுணர் நந்திவர்மன் முத்து. இவர், ஐக்கிய நாடுகளின் உலக நீர் தரக் கூட்டணியின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக் சேர்ந்த 12 உறுப்பினர்களில் அவர் ஒருவர் ஆவார்.புதுச்சேரி பல்கலைக்கழகம் முன்னாள் மாணவரான அவர், பல்கலைக்கழக பசுமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையுடன் ஆலோசனை அந்தஸ்து கொண்ட வளாகங்கள் மற்றும் சமூகங்களில் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான சங்கத்தின் பிரதிநிதியாகவும் உள்ளார்.ஐ.நா.வின் உலக நீர் தரக் கூட்டணி ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள நந்திவர்மன் முத்துவை, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தரணிக்கரசு பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை