சிறுமியிடம் ஆபாச பேச்சு பல்கலை.,ஊழியருக்கு வலை
புதுச்சேரி: சிறுமியிடம் ஆபாசமாக பேசிய பல்கலைகழக ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி செல்லும் போதும், பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதும் ஒருவர் தொடர்ந்து மாணவியை பார்த்து ஆபாச வார்த்தைகளால் பேசியும், சைகை செய்தும் வந்தார். இது குறித்து அந்த மாணவி தனது தாயிடம் கூறியதைடுத்து, சிறுமியின் தாயார் காலாப்பட்டு போலீசில் புகார் கொடுத்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர், விசாரணையில்மாணவியிடம் ஆபாசமாக நடந்து கொண்டவர் அதே பகுதியை சேர்ந்த பல்கலைக்கழக ஊழியர் பழனிசாமி என்பது தெரிய வந்தது. இதையடுத்த தலை மறைவான அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.