உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தல்

மின் கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தல்

புதுச்சேரி: மின்துறையின் கட்டண உயர்வை முழுமையாக கைவிட வேண்டும் என, மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்ரமணியன் அறிக்கை: மின்துறை கடந்த 1ம் தேதி முதல் மின்துறை வீடு மற்றும் வர்த்தக உபயோகம் உள்ளிட்ட அனைத்து மின் நுகர்வோருக்கும் யூனிட் 1க்கு குறைந்தபட்சம் 20 பைசா மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த கட்டண உயர்வை மின்துறை முழுமையாக கைவிட வேண்டும். மின் கட்டண பாக்கி வைத்துள்ள அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் ரூ.1,000 கோடி நிலுவை தொகையை மின்துறை நிர்வாகம் உடனடியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மின்துறை உயர்த்த உள்ள மின் கட்டணத்தை மக்களிடம் வசூலிக்காமல், அதற்கான தொகையை அரசிடமிருந்து மானியமாக பெற்றிட ஆவணங்களை தயார் செய்து கவர்னர், முதல்வர், மின்துறை அமைச்சரிடம் அனுமதி பெற்று மின்கட்டண உயர்வை தடுத்திட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை