உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., கிளைக் கூட்டம்

உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., கிளைக் கூட்டம்

புதுச்சேரி : உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., சார்பில் கிளை நிர்வாகிகள் கூட்டம் இந்திரா காந்தி நகரில் நடந்தது. கூட்டத்திற்கு, தொகுதி பொறுப்பாளரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமான கோபால் தலைமை தாங்கினார். கிளை அவைத் தலைவர் விஜயன் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டத்தில், கிளை நிர்வாகிகளின் பல்வேறு கருத்துக்கள் கேட்கப்பட்டன. மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன் துவக்கவுரை ஆற்றினார். தொகுதி அவைத்தலைவர் ஆதிநாராயணன், செயலாளர் சக்திவேல் சிறப்புரையாற்றினார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவுடன் இந்திரா காந்தி நகர் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும். இளைஞர்கள் தொழில் துவங்கவும், வேலை வாய்ப்புகள் உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். கூட்டத்தில் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி தலைவர் ஸ்ரீதர், தொகுதி பொருளாளர் சசிகுமார் உள்ளிட்ட இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி நகர் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி