உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உழவர்கரை காங்., வேட்பாளர் ரோஜா நகரில் ஓட்டு சேகரிப்பு 

உழவர்கரை காங்., வேட்பாளர் ரோஜா நகரில் ஓட்டு சேகரிப்பு 

புதுச்சேரி: உழவர்கரை தொகுதி காங்., வேட்பாளர் சிவசங்கர் ரோஜா நகர், புது நகர், கணபதி நகர், அரும்பார்த்தபுரம் மற்றும் திட்டகுட்டை பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். ஓட்டு சேகரிப்பின் போது, தொகுதியில் ரூ. 165 கோடிகளுக்கும் மேலாக வளர்ச்சிப் பணிகளை செய்து முன்மாதிரி தொகுதியாக மாற்றி உள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் ராதா கிருஷ்ணா நகரில் ரூ. 19.7 கோடி, அரும்பாத்தபுரத்தில் ரூ. 19.8 கோடி, உழவர்கரையில் ரூ. 15.8 கோடி, ரெட்டியார்பாளையத்தில் ரூ. 44.7 கோடி, மூகாம்பிகை நகரில் ரூ. 10.8 கோடி, ஜவகர் நகரில் ரூ. 16.7 கோடிக்கு, சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு நலத்திட்டப்பணிகள் தொடர்ந்து கிடைத்திட தன்னை கை சின்னத்தில் ஓட்டு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை