வி.மணவெளி சாலையில் ரூ.42 லட்சத்தில் வாய்க்கால்
வில்லியனுார்: பொதுப்பணித் துறை சாலைகள் மற்றும் கட்டடங்கள் வடக்கு கோட்டம் சார்பில், ரூ.42 லட்சம் மதிப்பில் வி.மணவெளி - திரிவேணி நகர் செல்லும் மெயின் ரோட்டில் 'ப' வடிவ கழிவுநீர் வாய்க்கால் அமைக்க பூமி பூஜை நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம், எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவிப் பொறியாளர் நடராஜன், இளநிலைப் பொறியாளர் கார்த்திக் முன்னாள் கவுன்சிலர் மகாலிங்கம் உட்பட பலர் உடனிருந்தனர்.