மேலும் செய்திகள்
இளைஞர் காங்., ஆர்ப்பாட்டம்
27-Sep-2025
புதுச்சேரி: புதுச்சேரி செயின்ட் தெரேசா வீதி, நிர்மலா சிசு பவனில் காங்., மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ராஜ்பவன் தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் மருது பாண்டியன், முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பிரதீஷ் இருதயராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் நடந்த விழாவில், காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் கலந்து கொண்டு,குழந்தைகள் முன்னிலையில், கேக் வெட்டி கொண்டாடினார். முன்னதாக அருட்சகோதரிகள் பிறந்தநாள் பாடல் பாடி,சால்வை அணிவித்து வரவேற்றனர். பின், இரவு உணவு வழங்கப்பட்டது. இதில், எம்.பி.,யின் தனிச்செயலர் சம்பத் குமார், சிறுபான்மையினர் அணி துணைத் தலைவர் ஜோசப் (எ) ஆரோக்கியசாமி, மாநில செயலாளர் முத்துக்குமாரசாமி, ராஜ்பவன் தொகுதி செயல் தலைவர் சண்முகம், மாநில சிறப்பு அழைப்பாளர் கோபால், அலன், துணைத் தலைவர் சகாயராஜ், கணேசமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
27-Sep-2025