மீனவர்களை விடுவிக்க வைத்திலிங்கம் எம்.பி., கடிதம்
புதுச்சேரி: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் உள்ளிட்ட 24 பேரை படகுகளுடன் விடுவிக்க வேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மத்திய வெளி உறவு துறை அமைச்சருக்கு அனுபியுள்ள கடிதம்: காரைக்காலில் இருந்த கடந்த 15ம் தேதி ஒரு மீன்பிடிக்க 14 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் 12 பேரை இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். நேற்று மற்றுமொரு படகில் மீன்பிடிக்க சென்ற பத்து மீனவர்களும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. இந்த 10 பேரில் இருவர் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந் தவர்கள். எட்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்த்வர். சிறைபிடிக்கப்பட்ட 24 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.