மேலும் செய்திகள்
வடலுாரில் இன்று தருமசாலை துவக்க விழா பூஜைகள்
25-May-2025
புதுச்சேரி : வள்ளலாரின் 159ம் ஆண்டு தர்மச் சாலையை துவக்கிய நாளையொட்டி, முதலியார்பேட்டை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.முதலியார்பேட்டை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில், நேற்று காலை அகவல் உணர்ந்தோதுதல் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து, சத்திய ஞானக் கொடியுயர்த்துதல் நிகழ்ச்சியில், வழக்கறிஞர் ராமமூர்த்தி, கோபி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.தொடர்ந்து, வீணையில் அருட்பா இசையும், தொடர்ந்து, திருவருட்பா பாட்டு கச்சேரி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பேராசிரியர் குழந்தைவேலனார், சன்மார்க்க தலைவர் சரவணன், செயலாளர் செல்வநாதன், கணேசன், கோதண்டபாணி, கஜபதி உட்பட நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
25-May-2025