உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ரத்த நாள அடைப்பான் கருவி

ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ரத்த நாள அடைப்பான் கருவி

புதுச்சேரி : ராஜிவ்காந்தி அரசு மருத்துமனையில், ரத்த நாள அடைப்பான் (வெஸ்சல் சீலர்) கருவி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் ஆண்டுக்கு 7 ஆயிரம் பிரசவங்கள் வரை பார்க்கப்பட்டு வருகிறது.நோயாளிகளின் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய, ரத்த நாள அடைப்பான் (வெஸ்சல் சீலர்) கருவி வாங்கப்பட்டுள்ளது. நேற்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த கருவி கொண்டுவரப்பட்டது. இந்த கருவியின் பயன்பாட்டை, மருத்துவ கண்காணிப்பாளர் அய்யப்பன் துவக்கி வைத்தார்.அவர் கூறுகையில், 'இக்கருவி அறுவை சிகிச்சையின் போது, ரத்த இழப்பை குறைக்கிறது. அறுவை சிகிச்சையின் போது, கால அவகாசம் குறைக்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு பின், குறைவான வலி மற்றும் இயல்பு நிலைக்கு விரைவாக மீளுதல் போன்ற பயன்கள் இக்கருவியில் உள்ளது.மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ