வீராம்பட்டினம் கோவில் கொடியேற்றம் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம்
அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்ட விழாவையொட்டி, நடந்த கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. வீராம்பட்டினம் பிரசித்திபெற்ற செங்கழுநீர் அம்மன் கோவிலில், தேரோட்டம் நடக்கிறது. அதையொட்டி நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கோவிலில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில், பாஸ்கர் எம்.எல்.ஏ., கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ், திருப்பணிக்குழு தலைவர் காத்தவரா யன், வீராம்பட்டினம் மக்கள் பாதுகாப்பு குழு தலைவர் விஸ்வநாதன் உட்பட வீராம்பட்டினம் பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று 8ம் தேதி முதல், 14ம் தேதி வரை, பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா காட்சி நடக்கிறது. முக்கிய விழாவான 15ம் தேதி காலை 8:00 மணிக்கு தேரோட்டத்தை, மரபுபடி, கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைக்கின்றனர். நிகழ் ச்சி ஏற்பாடுகளை, கோவில் திருப்பணிக்குழுவினர், நிர்வாக அதிகாரி, வீராம்பட்டினம் மக்கள் பாதுகாப்பு குழுவினர் ஆகியோர் செய்து வருகின்றனர்.