உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இரும்பை - ஆலங்குப்பம் சாலையில் செடிகள் ஆக்கிரமிப்பு 

இரும்பை - ஆலங்குப்பம் சாலையில் செடிகள் ஆக்கிரமிப்பு 

வானுார் : புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் இருந்து இரும்பை கிராமம் வழியாக ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், கோட்டக்கரை, அன்னை நகர், ராயப்புதுப்பாக்கம், ராயப்பேட்டை, ஆப்பிரம்பட்டு கிராமங்களுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர்.மேலும், சென்னை, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பைபாஸ் வழியாக வரும் வாகனங்களும் இந்த சாலை வழியாக ஆரோவில் பகுதிக்கு செல்கின்றன.முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் இரும்பை மகாகாளேஸ்வரர் கோவில் துவக்கத்தில் இருந்து ஆலங் குப்பம் எல்லை வரை இருபுறமும், புதர் மண்டி சாலையை ஆக்கிரமித்துள்ளது.இதனால் எதிரெதிர் திசையில் வரும் வாகனங்கள் சாலையில் நீட்டிக்கொண்டிருக்கும் முட்கள், வாகன ஓட்டிகள் மீதுபடுவதால் சிரமம் அடைகின்றனர். மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்க முடியாத நிலை உள்ளது.எனவே சாலையை ஆக்கி ரமித்திருக்கும் புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை