உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 22ம் தேதி வாகன பேன்சி எண்கள் ஏலம்

22ம் தேதி வாகன பேன்சி எண்கள் ஏலம்

புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்துத் துறையின் வாகன பேன்சி எண்களுக்கான ஏலம் வரும் 22ம் தேதி நடக்கிறது.புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;புதுச்சேரி போக்குவரத்து துறையின் பி.ஒய் 05 வி.ஜி., (திருபுவனை) வரிசையில் உள்ள எண்களை https://parivahan.gov.in/fancy என்ற இணைய தளத்தில் வரும் 22ம் தேதி காலை 11:00 மணி முதல் மாலை 4:30 வரை ஏலம் விட இருக்கிறது. ஏலத்தில் பங்கு பெறுவதற்கு தேவை யான பெயர் மற்றும் கடவு சொல்லை, https://parivahan.gov.in/fancy இணையதளத்தில் நியூ பப்ளிக் யூசர் மூலம் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை பதிவு செய்யலாம். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கு பெறலாம்.மின்னணு ஏலம் முறையில், பங்கு பெற விரும்பு வோர் அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகளை இன்று முதல் https://transport.py.gov.inஎன்ற இணைய தள முகவரியில் பார்த்து, பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். விண்ணப்பத் தொகையின் விவரம், இ.எம்.டி.,யின் விபரம், ஏல நிபந்தனைகள் குறித்த விவரங்கள் மற்றும் இதர விபரங்கள், போக்குவரத்துத் துறை அலுவலகத்தின் தொலைப்பேசி எண் 0413 -2280170 மூலம் தெரிந்து கொள்ளலாம்.ஒரு குறிப்பிட்ட எண் முன்பதிவு செய்யப்பட்ட வாகனம் அந்த எண்ணை முன்பதிவு செய்த நாளிலிருந்து 90 நாட்களுக்குப் பதிவு செய்ய தவறினால் அத்தகைய முன்பதிவு செயலிழந்துவிடும். அவருக்கு ஒதுக்கப்பட்ட எண் அவரது உரிமையை இழந்துவிடும். இந்த ஏலம் சம்பந்தப்பட்ட பண பரிவர்த்தனை அனைத்தும் ஆன்லைன் மூலம் மட்டும் பெறப்படும். நேரிலோ மற்றும் காசோலையாகவோ ஏற்கப்படமட்டாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !