மேலும் செய்திகள்
நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
17-Jun-2025
செம்பனார்கோவில்:தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டார்.புதுச்சேரி மாநிலம், திருநள்ளாரை சேர்ந்தவர் மணிமாறன், 34; வேல்முருகன் நடத்தும் த.வா.க.,வின் காரைக்கால் மாவட்ட பொறுப்பாளர். இவருக்கும், உறவினரான பா.ம.க., மாவட்ட செயலர் தேவமணிக்கும் இடப் பிரச்னை இருந்தது. இதில், தேவமணி 2021 அக்., 22ல் வெட்டி கொல்லப்பட்டார்.இவ்வழக்கில், முதல் குற்றவாளியான மணிமாறன், ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவர், நேற்று, மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் நடந்த அக்கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்றுவிட்டு, காரில் திருநள்ளாறு புறப்பட்டார். செம்பனார்கோவில் காலஹஸ்திநாதபுரம் தனியார் கல்லுாரி அருகே சென்றபோது, எதிரே இரு கார்களில் வந்த மர்ம கும்பல், காரை வழிமறித்து மணிமாறனை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பியது.தேவமணி கொலைக்கு பழிக்கு பழியாக கொலை நடந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Jun-2025