உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கால்நடை மருத்துவ கல்லுாரி மாணவர் தங்கப் பதக்கங்கள் குவிப்பு

கால்நடை மருத்துவ கல்லுாரி மாணவர் தங்கப் பதக்கங்கள் குவிப்பு

புதுச்சேரி: ராஜிவ்காந்தி அரசு கால்நடை மருத்துக்கல்லுாரி பட்டமளிப்பு விழாவில், சபரிஷ் என்ற மாணவர் 5 தங்கப் பதக்கங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். புதுச்சேரி ராஜிவ் காந்தி அரசு கால்நடைமருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா கம்பன் கலையரங்கில் நடந்தது. இதில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் 73 பேருக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினர். இதில் புதுச்சேரி சேர்ந்த சபரிஷ் என்ற மாணவர் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர், கால்நடை நுண்ணிய நோயியல், கால்நடை நுண்ணுயிரியல், கால்நடை உயிரிவேதியல், மாணவர் பிரிவில் முதலிடம், அனைத்து மருத்துவ பிரிவில் சிறந்து விளங்குதல் ஆகிய பிரிவில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். தங்கப்பதக்கம் குவித்த மாணவர் சபரிைஷ, கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை