கால்நடை மருத்துவ தினம் விழிப்புணர்வு ஊர்வலம்
புதுச்சேரி : உலக கால்நடை மருத்துவ தினத்தையொட்டி, ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.விலங்குகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது, விலங்குகளின் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களை தடுப்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, புதுச்சேரி ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் பதாகைகளை ஏந்தி நேற்று காலை 10:00 மணியளவில், விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.கடற்கரை சாலை அம்பேத்கர் மணி மண்டபத்தில் இருந்து டூப்ளே சிலை வரை சென்று மீண்டும் காந்தி சிலையை வந்தடைந்தனர். நிகழ்ச்சியில், கால்நடை மருத்துவர்கள், மருத்துமனையில் பணிபுரியும் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.