வில்லியனுார் கொம்யூனில் நாளை கிராம சபை கூட்டம்
புதுச்சேரி : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராம பஞ்சாயத்துக்களின் நாளை கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. ஆணையர் ரமேஷ் செய்திக்குறிப்பு: வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட 24 கிராம பஞ்சாயத்துக்களில் நாளை (2ம் தேதி) கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. அதில், சேதராபட்டு மேற்கு, வில்லியனுார் மத்தியம் மற்றும் கிழக்கு, கோட்டைமேடு, சுல்தான்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு, குரும்பாபேட், மணவெளி வடக்கு மற்றும் கிழக்கு, ஒதியம்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு, கணுவாப்பேட்டை, உறுவையாறு, திருக்காஞ்சி, மங்கலம், சாத்தமங்கலம், சிவராந்தகம், அரியூர் தெற்கு மற்றும் வடக்கு ஆகிய கிராமங்களில், காலை 10:00 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர், தெரிவித்தார்.