3வது நாளாக இருளில் மூழ்கிய கிராமங்கள்
பாகூர்: முள்ளோடையில் உள்ள தானியங்கி துணை மின் நிலையத்தில் வெள்ளம் புகுந்ததால், மின்சாரம் விநியோகம் தடைப்பட்டது.புதுச்சேரி - கடலுார் சாலை முள்ளோடையில் உள்ள தானியங்கி துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து பாகூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், முள்ளோடை துணை மின் நிலையத்தில் தண்ணீர் புகுந்துள்ளது. மின் விநியோகம் தடை செய்யப்பட்டதால், பாகூர் பகுதியில் உள்ள கிராமங்கள்3வது நாளாக இருளில் மூழ்கியது. இதையடுத்து, மின் துறை ஊழியர்கள் வேறு ஒரு மின் நிலையத்தில் இருந்து மாற்றுப் பாதையில் மின் விநியோகம் செய்து வருகின்றனர்.துணை மின் நிலையத்தில் வெள்ளம் வடிந்த பின்னரே மின் நிலையத்தை பயன்படுத்திட முடியும். ஆனால், தொடர்ந்து வெள்ளம் செல்வதால், ஓரிரு நாட்களுக்கு பின், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.