உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் விக்சித் பாரத் யுவா கனெக்ட் நிகழ்ச்சி

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் விக்சித் பாரத் யுவா கனெக்ட் நிகழ்ச்சி

புதுச்சேரி : இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் விக்சித் பாரத் யுவா கனெக்ட்- 2047 நிகழ்ச்சி புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், துணை வேந்தர் பிரகாஷ் பாபு தலைமை தாங்கி, பேசுகையில், 'இன்றைய இளைஞர்கள் நாளைய நாட்டை வடிவமைப்பார்கள். இளைஞர்கள் மகாத்மா காந்தியின் வார்த்தைகளை பின்பற்ற வேண்டும். 'கனவு காணுங்கள்; கனவுகள் எண்ணங்களாக மாறும். எண்ணங்கள் செயல்களில் விளைவை ஏற்படுத்தும்' என்று டாக்டர் அப்துல் கலாமின் அறிவுரையை மேற்கோள்காட்டினார். இந்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின், என்.எஸ்.எஸ்., பிராந்திய இயக்குநர் சாமுவேல் செல்லையா வாழ்த்துரை வழங்கினார்.பல்கலை கழக பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பல்கலைக் கழக மாணவர் நலன் துறை, நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, சேவைகள் மற்றம் விடுதிகள்அலுவலகம் மற்றும் பொறியியல் பிரிவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை