உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மண்டல அளவில் வாலிபால் போட்டி

மண்டல அளவில் வாலிபால் போட்டி

அரியாங்குப்பம் : மண்டல அளவில் நடந்த வாலிபால் போட்டியில், தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் அணி சப் ஜூனியர் பிரிவில், முதலிடம் பிடித்தது.மண்டல அளவிலான வாலிபால் போட்டி, முருங்கப்பாக்கம் அடுத்த கொம்பாக்கம் காந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. போட்டியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்து கொண்டன.சப் ஜூனியர் பிரிவில் பங்கேற்ற முருங்கப்பாக்கம் தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அணி முதலிடத்தையும், மாணவர்கள் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. அவர்களை பள்ளி துணை முதல்வர் ஸ்ரீ சீதா, உடற்கல்வி ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை