உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வாக்காளர் விழிப்புணர்வு நடைபயணம்

 வாக்காளர் விழிப்புணர்வு நடைபயணம்

புதுச்சேரி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்வாக்காளர்களின் ஜனநாயக பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கில் வாக்காளர் விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் துவங்கிய நடைபயணத்தில் 1,600க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். நடைபயணத்தை தேர்தல் விழிப்புணர்வு அமைப்பான (ஸ்வீப்) நோடல் அதிகாரி கோவிந்தசாமி, எஸ்.பி., மாறன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். நடைபயணத்தில் மொபைல் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு, அதன்மூலம் பொதுமக்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் வாக்களிக்கும் செயல்முறையின் நேரடி விளக்கக் காட்சி அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை