உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இன்று வாக்காளர் சிறப்பு முகாம்

இன்று வாக்காளர் சிறப்பு முகாம்

புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளர் சிறப்பு முகாம் இன்று நடக்கிறது. மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, வாக்காளர் சிறப்பு முகாம் புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளின் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் (தட்டாஞ்சாவடி நீங்கலாக) இன்று நடக்கிறது. இதில் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியின் போது பெயர் விடுபட்டுள்ளதாக கருதும் நபர்களும் இச்சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பொதுமக்கள் தங்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் தகுதியான நபர்களுக்கும் இச்சிறப்பு முகாம் குறித்த தகவலைத் தெரிவித்து, அவர்கள் அனைவரும் இம்முகாமைப் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை