உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மாகி, ஏனாம் பகுதிக்கு ஓட்டு பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு  

 மாகி, ஏனாம் பகுதிக்கு ஓட்டு பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு  

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து மாகி, ஏனாம் பகுதிக்கு ஓட்டு பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. புதுச்சேரியில் வரும் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பயன்படுத்துவதற்காக, மின்னணு ஓட்டுப்பதிவு மற்றும் வி.வி.பாட் இயந்திரங்கள் அந்தந்த பகுதிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாகி மற்றும் ஏனாம் தொகுதிக்கு நேற்று ஓட்டு பதிவு இயந்திரங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக, ரெட்டியார்பாளையம் தேர்தல் துறை அலுவலகத்தில், ஓட்டு பதிவு இயந்திர கிடங்கு, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டது. பின்னர், ஓட்டு பதிவு இயந்திரங்கள் இரண்டு வாகனங்களின் மூலமாக மாகி மற்றும் ஏனாம் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், ஓட்டு பதிவு இயந்திர கிடங்கு மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ