தண்ணீர் கேன்கள் தி.மு.க., பிரமுகர் வழங்கல்
புதுச்சேரி,: பாதிக்கப்பட்ட நெல்லித்தோப்பு தொகுதி மக்களுக்கு தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் சக்தி நகர் முழுதும் இலவசமாக 20 லிட்டர் தண்ணீர் கேன் வழங்கப்பட்டது புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக குடிநீரில் கழிவு நீர் கலக்கப்பட்டதால் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட நெல்லித்தோப்பு தொகுதி, சக்தி நகர் பகுதி முழுதும் தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் சொந்த செலவில் 1,100 குடும்பங்களுக்கு வீடு வீடாகச் சென்று இலவசமாக சுத்தகரிக்கப்பட்ட 20 லிட்டர் தண்ணீர் கேன் வழங்கினார். இதில், தொகுதி செயலாளர் நடராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வேலவன், மாணவரணி துணை அமைப்பாளர் கண்ணன், மாநில பிரதிநிதி முருகன், தகவல் தொழில்நுட்ப மாநில துணை ஒருங்கிணைப்பாளர் அருண், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் கிருபாசங்கர், சக்தி நகர் நிர்வாகிகள் உட்ப பலர் உடனிருந்தனர்.