உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது சாலை மறியலில் ஈடுபட முயற்சி

குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது சாலை மறியலில் ஈடுபட முயற்சி

திருக்கனுார்: பொதுப்பணித்துறை அலட்சியத்தால் வாதானுார் ஏரி நிரம்பி குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது.பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் புதுச்சேரியில் உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பி வழிகிறது.பம்பை ஆற்றின் குறுக்கேயுள்ள தடுப்பணை மூலம் வாதானுார் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், நேற்று காலை வாதானுார் ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது.ஆனால், வாதானுார் ஏரி நிரம்பி திருமங்கலம் ஏரிக்கு செல்லும் சோம்பட்டு வாய்க்கால் துார் வாரப்படாததால், தண்ணீர் அருகிலுள்ள வாதானுார் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருப்புகளில் புகுந்த தண்ணீரை உடனே வெளியேற வலியுறுத்தி வாதானுார்- பி.எஸ்.பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்ட முயன்றனர். தகவலறிந்த திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர், வாதானுார் ஏரியில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் வந்த பாதையில் மண் மூட்டைகளை அடுக்கி தண்ணீரை வெளியேறும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, திருமங்கலம் ஏரிக்கு செல்லும் வாய்க்கால் அடைப்புகள் சரிசெய்யப்பட்டன.இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ