உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வறுமை இல்லாத சூழலை ஏற்படுத்தியுள்ளோம் : முதல்வர் பெருமிதம்

வறுமை இல்லாத சூழலை ஏற்படுத்தியுள்ளோம் : முதல்வர் பெருமிதம்

புதுச்சேரி : பிரதமர் மோடி கூறியதை போன்று பெஸ்ட் புதுச்சேரியாக தான் இருக்கின்றது என முதல்வர் ரங்கசாமி பேசினார்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்ற விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: ஆரோக்கியமான வாழ்வு அனைவருக்கும் அவசியம். அது தான் வளமான வாழ்வாகவும் இருக்கும். சுற்றுச்சூழல் நன்றாக இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். எனவே சுற்றுச்சூழலை அனைவரும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.நாடு வளர்ச்சியடைய தொழில் வளர்ச்சி அவசியம். தொழிற்சாலைகள் வந்தால் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர முடியும்.நல்ல கல்வியை கொடுக்கின்றோம். இளைஞர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும்போது அவர்களுக்கு வேலைவாய்ப்பும் ரொம்ப முக்கியம். வேலைவாய்ப்பு இருந்தால் தான் அந்த குடும்பத்தின் வருமானம் உயரும். பொருளாதார ரீதியாகவும் அந்த குடும்பம் தலைநிமிரும்.அதற்கு தொழிற்சாலைகள் முக்கியமானது. தாயின் பெயரில் ஒரு மரம் வளர்ப்போர் என்ற திட்டத்தை பிரதமர் அறிவித்துள்ளார். இது பசுமையை உருவாக்கும். மரங்கள் அழிக்கப்படும்போது மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். இது மிகவும் அவசியம். உண்ண உணவு, இருக்க இடம் அவசியம். பசி, வறுமை இல்லாமல் இருக்க வேண்டும். அந்த வகையில் இலவச அரிசி , இலவச கோதுமை திட்டம் மூலம் புதுச்சேரியில் வறுமை இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளோம். உடுத்த உடை கொடுக்கப்படுகின்றது. எல்லோருக்கும் வீடு கட்டும் திட்டத்தையும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தி வருகின்றோம். பிரதமர் கூறியதுபோன்று பெஸ்ட்டாக தான் புதுச்சேரி இருக்கின்றது. மாநிலம் வளர்ச்சியடையும்போது நாடும் வளர்ச்சியடையும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ