உள்ளூர் செய்திகள்

ஆயுத பூஜை வழிபாடு

புதுச்சேரி: சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில், முதல்வர் ரங்கசாமி ஆயுத பூஜை செய்து வழிபட்டார். முதல்வர் அலுவலகத்தில் நேற்று ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. முதல்வர் ரங்கசாமி அலுவலகத்திற்கு காலை 11:00 மணிக்கு வந்தார். அறையில் வைக்கப்பட்டிருந்த பைல்களுக்கு பொட்டு வைத்து, பூஜை செய்தார். நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, பாஸ்கர் எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அலுவலக ஊழியர்களுக்கு பிரசாதம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை