விளையாட்டு வீரர்களுக்காக இணையதளம் துவக்கம்
புதுச்சேரி: அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்ககம் சார்பில், விளையாட்டு வீரர்கள் பயன்பெறும் வகையில், இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அலுவலகத்தில் நேற்று விளையாட்டு வீரர்களுக்காக இணைதள துவக்க விழா நடந்தது. விளையாட்டுத்துறை செயலர் கிருஷ்ண மோகன் வரவேற்றார். அமைச்சர் நமச்சிவாயம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். விளையாட்டுத்துறை இயக்குனர் சுதாகர் முன்னிலை வகித்தார். இந்த இணையதளம் 2.0 பதிப்பில் சேட் பாக்ஸ், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மற்றும் நேவிகேஷன் சிறப்பம்சத்தில் புதுச்சேரியில் முதன் முதலாக ஜி.யு.ஐ., வடிவில், யு.ஐ., மற்றும் யு.எக்ஸ்., காட்சி வழியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் விளையாட்டு மற்றும் இ ளைஞர் நலப் பணிகள் மற்றும் திட்டங்கள், செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் இணைய வாசல் ( போர்டல்) இணைக்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில், விளையாட்டுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.