உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

புதுச்சேரி : முத்தியால்பேட்டை, லட்சுமி ஹயக்ரீவர் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று திருக்கல்யாணம் உற்சவத்துடன் நிறைவு பெற்றது. முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 54ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் ேஹாமம் மற்றும் திருமஞ்சனம், இரவில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது. 9ம் நாளான நேற்று முன்தினம் ஹயக்ரீவ ஜெயந்தி தேரோட்டம் மற்றும் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இறுதி நாளான நேற்று இரவு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை