உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராமலிங்கேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

ராமலிங்கேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. நெட்டப்பாக்கம் பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துக்குமரப்பா கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. கடந்த 26 ம் தேதி வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 27 ம் தேதி சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று முன்தினம் வள்ளி தெய்வானை-செல்வமுத்துகுமராசாமி திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அண்ணதானம் வழங்கப்பட்டது. நேற்று மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !