மேலும் செய்திகள்
பெருமாள் கோவில்களில் கூடாரவல்லி உற்சவம்
12-Jan-2026
புதுச்சேரி: வில்லியனுார் வரதராஜப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாண மகா உற்சவம் நடந்தது. வில்லியனுாரில் பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், திருக்கல்யாண உற்சவம் கடந்த 30ம் தேதி நடந்தது. அதையொட்டி, காலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவு பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜபெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அதிகாரி சந்தானராமன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
12-Jan-2026