உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பளு துாக்கும் போட்டி பரிசளிப்பு விழா

பளு துாக்கும் போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரி: தவளக்குப்பம், ராஜிவ் காந்தி அரசு கலைக் கல்லுாரி உடற்கல்வித் துறை சார்பில், கல்லுாரிகளுக்கு இடையிலான பளு துாக்கும் போட்டி, லாஸ்பேட்டை சாய் பயிற்சி அரங்கில் நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொ) ஹன்னா மோனிஷா போட்டியை துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குநர் ஆதவன் வரவேற்றார். பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். பரிசளிப்பு விழாவில், கணினி அறிவியல் துறைத் தலைவர் ஞனாம்பிகை வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை