உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதியோர்களுக்கு நலத்திட்ட உதவி

முதியோர்களுக்கு நலத்திட்ட உதவி

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த முதியோர்களுக்கு போர்வை, காலணிகளை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த முதியோர்களுக்கு இலவச போர்வை, காலனிகள் வழங்கும் நிகழ்ச்சி பனையடிக்குப்பம் கிராமத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு தொகுதியைச் சேர்ந்த முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், நலத்துறை அதகாரிகள், அங்கன்வாடி ஆசிரியர், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ