உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சிறப்பு கூறு நிதி செலவினம் குறித்து வெள்ளை அறிக்கை; மக்கள் முன்னேற்ற கழகம் வலியுறுத்தல்

 சிறப்பு கூறு நிதி செலவினம் குறித்து வெள்ளை அறிக்கை; மக்கள் முன்னேற்ற கழகம் வலியுறுத்தல்

புதுச்சேரி: சிறப்பு கூறு நிதி செலவினம் குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என, புதுச்சேரி மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர், வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் சமர்ப்பித்த இடைக்கால ஐந்தாண்டு பட்ஜெட் காலத்தில் ஒரு ஆண்டு கூட 16 சதவீத நிதியை இவரது அரசு செலவு செய்யவில்லை. இந்தக் காலக்கட்டத்தில் ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கு ஒரு ரூபாய் கூட மூலதன செலவு செய்யவில்லை. வீடு மற்றும் மனைப்பட்டா இல்லாமல் ஆதிதிராவிட பழங்குடி இன மக்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் வாழும் கிராம மற்றும் நகரப் பகுதிகளில் அடிப்படை சமூக கட்டமைப்புகள் உருவாக்கித் தரப்படவில்லை. காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் இந்த மக்கள் வசிக்கும் கிராமங்களை முதல்வர் நேரில் பார்க்க வேண்டும். பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசிடம் இருந்து இந்த அரசு இன்னும் பெற்றுத் தர முடியவில்லை. முதல்வர் சொல்வது போல் 16 சதவீத சிறப்பு கூறு நிதி இம்மக்களுக்கு செலவு செய்யப்பட்டிருந்தால், கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்திய திட்டங்கள் என்னென்ன, எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது. எவ்வளவு நிதி செலவு செய்யப்பட்டது என்பது குறித்து வெள்ளை அறிக்கை அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ