உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திடீர் அரசியல் ஆலோசனை ஏன்? வையாபுரி மணிகண்டன் பளீச்

திடீர் அரசியல் ஆலோசனை ஏன்? வையாபுரி மணிகண்டன் பளீச்

பு துச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு, பா.ஜ.,வில் இருந்து விலகி நிற்கும் முன்னாள் தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க., மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்து ஆலோசனை நடத்தியது புதுச்சேரி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.இவர்கள் 3 பேரும் புதுச்சேரி அரசின் கடும் விமர்சனங்களை முன் வைத்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இவர்களின் திடீர் சந்திப்பு குறித்து அ.தி.மு.க., மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் கூறுகையில், 'புதுச்சேரி அரசியல் எப்போதுமே ஒரு வினோதமானது. தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களை போல கட்சிகளுக்கு இங்கு அதீத முக்கியத்துவம் இல்லை. தனி நபரின் செல்வாக்கே தேர்தலில் வெற்றியை தரும். புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசில் ஊழலும், லஞ்ச லாவண்யமும் அதிகரித்து வருகிறது. ரெஸ்டோ பார் மற்றும் சாராய கொள்கையினால் மாநில மக்கள் மிகுந்த வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர்.மக்களை பற்றி எள்ளளவும் சிந்திக்கக்கூட ஆட்சியாளர்களுக்கு நேரமில்லை. எதிர்க்கட்சிகளோ மவுனமாக உள்ளனர். மற்றொரு புறம், புதுச்சேரி மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கையை விலை பேசி வியாபாரம் செய்ய ஒரு கூட்டம் தயாராகி வருகிறது.இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலை புதுச்சேரி அரசியலில் நிலவி வருகிறது. புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றமே, மாநிலத்தின் முன்னேற்றம் என்ற கொள்கை உடைய, ஒத்த கருத்துடைய நல்லவர்களை தேடுகிறோம்; ஒன்றிணைக்கிறோம். இதன் அடிப்படையில்தான் இந்த சந்திப்பு நடந்தது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை