உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவி, குழந்தை இறப்பு கணவர் தற்கொலை

மனைவி, குழந்தை இறப்பு கணவர் தற்கொலை

காரைக்கால்: காரைக்காலில் பிரசவத்தில் மனைவி மற்றும் குழந்தை இறந்த மனவேதனையில் கணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரைக்கால் கோட்டுச்சேரி அக்கம்பேட்டை சுனாமி நகரை சேர்ந்தவர் வீரராகவன், 36; இவர் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி நித்தியாவின் பிரசவத்தின் போது, நித்தியா மற்றும் குழந்தை இருவரும் இறந்தனர். இதனால் வீரராகவன் மனமுடைந்து மதுபோதைக்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தை இறந்த வேதனையில் நேற்று முன்தினம் வீட்டில் ஜன்னல் கம்பியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை