கணவர் மீது கோபம் மனைவி தற்கொலை
காரைக்கால்: காரைக்காலில் கணவன் தனது நண்பர்களுடன் சுற்றுலா செல்வதாக கூறியதால், மனமுடைந்த மனைவி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரைக்கால், பிரெஞ்சு ஆசிரியர் தெருவை சேர்ந்தவர் முத்து சீனிராஜா; பேக்கரி வைத்துள்ளார். இவர், கடந்த 2016ம் ஆண்டு ஈஸ்வரன் மகள் நிலஞ்சனா, 28, என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ௨ மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சீனிராஜா தனது நண்பர்களுடன் கொடைக்கானல் சுற்றுலா செல்வதாக நிலஞ்சனாவிடம் தெரிவித்தார். அதற்கு அவர், செல்ல வேண்டாம் என, கூறினார். இதனால் கணவன், மனை வி இடையே தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த நிலஞ்சனா வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின்பேரில், நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.