மேலும் செய்திகள்
மனைவி மாயம் : கணவர் புகார்
03-Jun-2025
புதுச்சேரி: கம்பெனிக்கு சென்ற பெண் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், நெற்குணம் மாரியம்மமன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி தனம், 22. இவர்கள் கடந்த 2021ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். தனம் புதுச்சேரி, ஐயங்குட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 7ம் தேதி காலை வழக்கம் போல் கம்பெனிக்கு சென்றார். பின் வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது கணவர் பிரேம்குமார் புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
03-Jun-2025